Sunday, 6 March 2011

"அட போடி"

செருப்பு அறுந்து..
வெறும் காலில்
சூடு தாங்க முடியாமல்
சாலையில் நீ குடுகுடு வென
ஓடி வருவதை பார்த்து..

கடையினில் புது செருப்பு வாங்கி..
நான் போட்டிருந்த செருப்பினை
கடைக்கு வெளியிலே மறந்து விட்டு,
ஓடி வந்து
உன்னிடம் கொடுத்தால்,,,

நீயோ இப்படி சொல்கிறாய்,

"இப்பலாம் நேரடியா வந்து
வியாபாரம் பண்ண ஆரம்பிச்சுடீங்களா??
வேற மாடல் இருக்கா??"

இதற்க்கு அந்த செருப்பாலேயே
நாலு அடி அடிச்சுருக்கலாம்"

"அட போடி"

ஏனோ??

நான் குடித்து விட்டு
வீடு வந்ததும்,
ச்சி போ என்று
கூறினாய்,
நீ ஒரு மூலையில் படு,
நான் ஒரு மூலையில் படுக்கிறேன்
என்று கூறினாய்..
மறுநாள் காலையில்
நான் கண் விழித்த போது,
ஏனோ என்னை
இறுக்க கட்டி பிடித்தவாறு
தூங்கி கொண்டு இருந்தாய்...

கடுப்பேற்றாதே!!

என்னை வெறுப்பேற்ற
உன் வீட்டு நாய் குட்டியை
என் பார்வையில் படுமாறு  கொஞ்சுகிறாய்..
இப்பொழுதே சொல்லிவிடுகின்றேன்..
நீ கொஞ்சும் அந்த நாய் குட்டி
இரவோடு இரவாக
காணாமல் போனால்
என்னை சந்தேக படாதே..

Saturday, 5 March 2011

ஒற்றை ரோஜா

என் காதலியின்
பிறந்த நாள் நெருங்குகின்றது..
பலி கொடுத்து விடுவானோ
என்ற பயத்தில்
என் வீட்டு ஒற்றை ரோஜா!!

ஆட்டினை பலிகொடுப்பதற்க்கு முன்
பூசாரி தண்ணீர் தெளிப்பதனை போல
நான் ஒவ்வொரு முறை
என் வீட்டுக்கு ரோஜா செடிக்கு
தண்ணீர் விடும் போதும்
ரோஜா செடி
சம்மதம் தெரிவிக்காமல்
உயிர்பயத்தில்
தன் மூச்சினை
இறுக்கமாக அடக்கி வைத்து கொள்ளும்...